எங்களுக்காக அதை மட்டும் பண்ணுங்க நெல்சன்..கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்..நடந்தா நல்லா இருக்கும்..!

நெல்சன் தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பாக் கொடுத்துள்ளார். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் மூலம் வெற்றிகளை பெற்ற நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் கடுமையான ட்ரோல்களுக்கு ஆளானார். என்னதான் பீஸ்ட் வசூல் ரீதியாக வெற்றிப்படம் என்றாலும் நெல்சன் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்.

அதுவரை நெல்சனை கொண்டாடி வந்தனர் ரசிகர்கள். வித்யாசமான ஜானரில் படமெடுத்து, வித்யாசமாக ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார் நெல்சன். ஆனால் ஒரே ஒரு படம் சற்று சொதப்பியதால் மிகவும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து ஒரு சிலர் நெல்சன், ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் கம்பாக் கொடுத்து பதிலடி தரவேண்டும் என விரும்பினர்.

அந்த தகவலில் உண்மையில்லை..தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள்..முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர் ரஹ்மான்..!

அதே போலவே ஜெயிலர் படம் தற்போது தருமாறு வெற்றியை பெற்று நெல்சனுக்கு தரமான ஒரு கம்பாக்கை தந்துள்ளது. இந்நிலையில் நெல்சனுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் ஜெயிலர் ஒரு தேவையான வெற்றியை பெற்று தந்தது. அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வெற்றிபெற தவறியதை அடுத்து ரஜினியும் ஜெயிலர் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப காத்துக்கொண்டிருந்தார்.

சிம்பு ரசிகர்களின் கோரிக்கை

எனவே ஜெயிலர் மூலம் நெல்சன் மற்றும் ரஜினி இருவரும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் போது நெல்சனை விமர்சித்தவர்கள் தற்போது ஜெயிலர் படத்திற்கு பிறகு பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நெல்சன் மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நெல்சன் அடுத்ததாக யாருடன் இணையப்போகின்றார் என்பது தான் தற்போதைய ரசிகர்களின் கேள்வியாக இருக்கின்றது. பெரும்பாலும் நெல்சன் தனுஷுடன் தான் இணைவார் என பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வரை நெல்சன் தன் அடுத்த படத்தை பற்றி யோசிக்கவில்லை என தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் சிம்புவின் ரசிகர்களோ நெல்சனுக்கு ஒரு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது சிம்புவின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. எனவே அந்த படத்தை சிம்புவை வைத்து மீண்டும் துவங்குமாறு நெல்சனிடம் சிம்பு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நெல்சன் ஏற்பாரா?

கடந்த 2009 ஆம் ஆண்டு சிம்பு, ஜெய், ஹன்சிகா ஆகியோரை வைத்து நெல்சன் இப்படத்தை துவங்கினார். அந்த காலகட்டத்தில் வேட்டை மன்னன் படத்திலிருந்து வெளியான ஸ்டில்ஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் இப்படத்திற்காக ஒரு இரண்டு நிமிட வீடியோவை நெல்சன் உருவாக்கியிருந்தார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஆனால் ஒரு சில காரணங்களாக இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. கிட்டத்தட்ட இப்படத்தின் 60 % படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாம். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியை செம மாஸாக காட்டி தலைவரின் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் நெல்சன். அதைப்போல வேட்டை மன்னன் படத்தை மீண்டும் துவங்கி சிம்புவிற்கும் செம மாஸான ஒரு படத்தை நெல்சன் தரவேண்டும் என அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.