மத்திய மாகாணத்தில் சுகாதார பாதுகாப்பான நீரை தடையின்றி வழங்க நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்தும், நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள குறைப்பாடுகள் சம்பந்தமாகவும், சுகாதார பாதுகாப்பான நீரை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை பற்றியும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.

இதற்கான தீர்வு பொறிமுறையை தயாரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி பேசப்பட்டு, தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன.

அமைச்சருக்கும்;, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே. இடையிலான கலந்துரையாடலொன்று கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்றள்ளது.

இதன்போதே மேற்படி நீர்வழங்கல் குறித்து ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம், ஆளுநர் வசம் இருப்பதால், கண்டி, நுவரெலியாவில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் துறைசார் அதிகாரிகளிடம் இது பற்றி பேச்சு நடத்தி, மக்களுக்கு தடையின்றி நீரை வழங்குவதற்கும் இங்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது, மத்திய மாகாண தமிழ்க் கல்வி பிரிவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என்றும் ஆளுநர் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.