யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ரஜினி!
கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்ற ரஜினிகாந்த், ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜியின் குகை உள்பட பல இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார். அதையடுத்து இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ரஜினி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று அம்மாநில கவர்னரான சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அதன் பிறகு யாகோடா ஆசிரமகுரு பரமஹம்சர் யோகானந்தாவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.
பின்னர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்ற ரஜினி, அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் தான் நடித்த ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்தார். அதன் பிறகு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த ரஜினி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். அதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.