சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) ஏ.ஆர்.ரஹ்மான் துருவ் விக்ரம் படத்துக்கு இசையமைப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து தேசிய விருதை வென்று அசத்தியவர். அதன் பிறகு அவர் கோலிவுட்டை ஆட்சி