`திருமா போராட்டம் முதல் டிடிவி பேட்டி வரை' முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு | News In Photos

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 30-வது நிறுவன நாள் மற்றும் விவசாயிகள் தின விழாவில், வாழை தொடர்பாக சிறப்பாக பணியாற்றிய 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், பிரிண்ட் மீடியா பிரிவில் வாழை தொடர்பாக சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக பசுமை விகடனுக்கு விருது கொடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் தென்முக வெள்ளோடு ராசா சுவாமி நல்லமங்கையம்மன் கோயில் தேரோட்டம்
ஈரோடு கனி ராவுத்தர்குளம் ஓங்காளியம்மன் கோயில் பொருள்களை திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருநங்கை ஆமிஷா என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னையில் உள்ள தாமஸ் மன்றோ சிலை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது.
தேனியில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ் வளர்ச்சி அரசு செயலாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
தஞ்சையில் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் அதிமுக மாநாட்டையும் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்தார்.
பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.
மதுரையில் நடைபெற்று முடிந்த அதிமுக மாநாட்டில் மீதமுள்ள உணவை கீழே கொட்டியுள்ளனர்
புதுச்சேரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் மீண்டும் வேலை வேண்டி தலைமை அலுவலகத்தின் வாயில் மீது ஏறி தற்கொலை முயற்சி போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி: நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகளை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினார்.
மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வேண்டி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட
தம்பதியினர்
கன்னியாகுமரி ஈசாந்திமங்கலம் அண்ணா காலனி கிராமத்தில் சுடுகாட்டிற்க்கு செல்ல பாதை அமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முகத்தில் கரி பூசி, பட்டை நாமம் அடித்து மனு அளிக்க வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.