உயிருக்கு போராடிய சமயத்தில் கூட டான்சர் ஒருவர் தவறாக நடந்தார் – சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி காட்டம்

பிரபல சின்னத்திரை நடிகையான சந்தியா ஜகர்லமுடி தமிழில் வம்சம், சந்திரலேகா, அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தன்னை சுற்றி மோசமான விஷயங்கள் நடந்ததாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். 2006 ஆம் ஆண்டு செல்லமடி நீ எனக்கு என்கிற டைட்டில் பாடல் ஷூட்டுக்காக கும்பகோணத்தில் உள்ள யானையுடன் சந்தியா நடித்தார். அப்போது திடீரென யானை சந்தியாவை தாக்கி அவரை மிதித்தது. இதில் அவருக்கு 7 இடங்களுக்கு மேல் பலமாக அடிப்பட்டு எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. இதனையடுத்து அன்றைய காலக்கட்டத்தில் டிவி நிகழ்ச்சிகளில் பெரும் விவாதம் ஏற்பட்டது. அதாவது, சந்தியா மாதவிடாய் காலத்தில் கோவில் யானைக்கு அருகில் சென்றதால் தான் யானை அதை அறிந்து தாக்கியதாக சிலர் டிவி விவாதங்களில் பேசினர்.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள சந்தியா, 'யானையால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய போது கூட டான்சர் ஒருவர் என் மார்பை பிடித்து தவறாக நடந்து கொண்டார். அந்த விஷயம் என்னை மிகவும் காயப்படுத்தியது. நான் யானையால் தாக்கப்பட்ட சம்பவத்தை விவாதம் ஆக்கினார்கள். எனக்கு மாதவிடாய் இருந்தது, அதனால் தான் யானை தாக்கியது என்றனர். எனக்கு மாதவிடாய் என்பது மத்தவங்களுக்கு எப்படி தெரியும். நான் சொன்னால் தானே அது உண்மை. உண்மையில் யானை கோபமடைய காரணம் மூன்று முறை யானையை நடந்து வர செய்து டேக் எடுக்க செய்தது தான். அது ஷூட்டிங் யானை இல்லை கோயில் யானை. ஆனால் இன்று வரை கூட இதுகுறித்து என்னிடம் யாருமே விளக்கம் கேட்கவில்லை' என்று பரப்பான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.