வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காவிரி வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகளை நியமனம் செய்து புதிய அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, வினாடிக்கு 10,000 கன அடி வீதம், 38 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறக்கும்படி, கர்நாடகாவுக்கு கடந்த 11ம் தேதி தெரிவிக்கப் பட்டது. இதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
![]() |
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. காவிரியில் கூடுதல் நீர் திறக்க உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 25-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த சூழ்நிலையில் காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பி.ஆர். கவாய், நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகிய மூன்று பேர் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement