வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழில் பேசி ஓட்டுகேட்டனர் . அந்நாட்டின் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1 ல் நடக்கவுள்ளது.
இங் கொக் சொங், தர்மன் சண்முகரத்னம், டான் கின் லியான் ஆகிய 3 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 3 பேரும் பிரசாரத்தை துவக்கினர்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய வேட்பாளர்கள் இங் கொக் சொங், தர்மன் சண்முகரத்னம், இருவரும் ” வணக்கம் எனக்கு வாக்களியுங்கள், தமிழ்குடிமக்களே” என்று பேசினர்.
சிங்கப்பூரில் வரும் ஆக.30 வரை பிரசாரம் நடக்கும் செப்.1ல் ஒட்டுப்பதிவு நடக்கிறது.
சிங்கப்பூரை பொறுத்தவரை தமிழர்கள் பெரும்பாலானோர் வசிக்கின்றனர்.
தர்மன் சண்முகரத்தினம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார் சிங்கப்பூரில் பிறந்தாலும் இவரது மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள். தமிழகத்திலும் அவரது உறவினர்கள் உள்ளனர். சண்முகரத்தினம் இதில் தமிழரும், முன்னாள் அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடுகிறார். இதற்காக அவர் முறைப்படி பிரச்சாரத்தை தொடங்கினார்.
2019 முதல் 2023 வரையிலான காலத்தில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சராகவும், 2015 முதல் 2023 வரையிலான காலத்தில் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார்.
2011ஆம் ஆண்டு முதல் 2019 வரை துணைப் பிரதமராகவும் சேவையாற்றியிருக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement