ஜெயிலர் சாதனை: ஷங்கர், மணிரத்னத்தை அடுத்து நெல்சனுக்கு கிடைத்த கவுரவம்

நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பவம் செய்த ஜெயிலர் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது.

ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda..
ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படம் வசூலில் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸான 12 நாட்களில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இந்தியாவில் செய்த மொத்த வசூல் சாதனையை முறியடித்துவிட்டது.

வெறும் 12 நாளில் பொன்னியின் செல்வன் சாதனையை முறியடித்த ஜெயிலர்: அலப்பறையை கெளப்பும் ரஜினி

ஜெயிலர் படம் 12 நாட்களில் ரூ. 288.60 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற பட்டியலில் முதலிடத்தில் இருந்த பொன்னியின் செல்வனை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டது.

ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு மக்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் வசூல் வேட்டை தற்போதைக்கு நிற்பதாக இல்லை.

ரூ. 500 கோடி வசூல் செய்த தமிழ் இயக்குநர்களாக ஷங்கரும், மணிரத்னமும் தான் இருந்தார்கள். இந்நிலையில் அந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ரஜினிகாந்தின் 2.0 படத்திற்காக ஷங்கரும், பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னமும் ரூ. 500 கோடி தமிழ் இயக்குநர்கள் கிளப்பில் இருக்கிறார்கள். தற்போது ஜெயிலருக்காக அந்த கிளப்பில் சேர்ந்துவிட்டார் நெல்சன் திலீப்குமார்.

முன்னதாக அவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படத்தை பார்த்து தளபதி ரசிகர்களே வேறு விதமாக விமர்சித்தார்கள். அதனால் ஜெயிலருக்கு நெல்சன் திலீப்குமார் வேண்டாம் என ரஜினியிடம் சிலர் தெரிவித்துள்ளனர். அதை எல்லாம் தாண்டி தான் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தார் ரஜினி.

அவர் நெல்சன் திலீப்குமார் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நெல்சன் திலீப்குமார். இந்நிலையில் தன் நான்காவது படத்திலேயே ரூ. 500 கோடி வசூல் சாதனை நாயகனாகிவிட்டார்.

ஜெயிலர் பட வெற்றியை அடுத்து நெல்சனின் மதிப்பு அதிகரித்துவிட்டது.

ரஜினியின் பவர் தான் ஜெயிலர் வெற்றிக்கு காரணம் : நெல்சன்

ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்தின் பவர் தான் காரணம் என தெரிவித்து தலைவர் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் நெல்சன் திலீப்குமார்.

ஜெயிலர் படம் மூலம் ரஜினியை அடுத்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சிவராஜ்குமார். ஜெயிலர் மூலம் கோலிவுட் வந்திருக்கிறார் கன்னட நடிகரான சிவராஜ்குமார். அவர் சில நிமிடங்கள் மட்டுமே வந்தபோதிலும் சிவராஜ்குமாரின் காட்சிகள் தான் மாஸாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

ஜெயிலருக்கு பிறகு சிவராஜ்குமாரை ஷிவாண்ணா என அன்புடன் அழைக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் நான் சென்னை பையன். இங்கு தான் வளர்ந்தேன் என்று கூறி தமிழ் ரசிகர்களை மேலும் கவர்ந்துவிட்டார் சிவராஜ்குமார்.

ஜெயிலரை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடித்திருக்கிறார். ஜெயிலரை விட கேப்டன் மில்லரில் கூடுதல் நேரம் வருவேன் என்கிறார் ஷிவாண்ணா.

மேலும் தனுஷை பார்க்கும்போது தன்னை பார்ப்பது போன்று இருப்பதாக கூறியிருக்கிறார். தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் தனுஷும் ஒருவர் என தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.