பயங்கரவாதி தஹாவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை | 26/11 Accused Tahawwur Ranas Extradition To India Stayed By US Court

வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை, நாடு கடத்த சர்க்யூட் ஹவுஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 2009 நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்தத் தாக்குதலில் தொடர்புடைய, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த, வட அமெரிக்க நாடான கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா, அமெரிக்காவில் 2009 ல் பிடிபட்டார். இவர், பாக்., பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மாவட்ட நீதிமன்றம் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நடத்த கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பயங்கரவாதி தஹாவூர் ராணா சார்பில் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றத்தில், பயங்கரவாதி தஹாவூர் ராணா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.ராணாவை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை விதித்து உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.