மகளிருக்கு மாதம் ரூ.1500 – திமுகவை ஓவர் டேக் செய்யும் காங்கிரஸ்.. இன்னும் இருக்கு பெரிய லிஸ்ட்!

தமிழகத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளைப் போல காங்கிரஸும் முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்
காங்கிரஸ்
வெற்றிபெற்று கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வர் பதவி தராத அதிருப்தியில் ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதனால் 15 மாதங்களில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம் பாஜக ஆட்சியமைத்த நிலையில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார்.

மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் இப்போதே பரப்புகளை தொடங்கிவிட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பிரதேச மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அங்குள்ள சாஹர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகும். மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும், எதிர்காலத்தில் அரசுக்கு பணம் கிடைத்தால் இந்த தொகையை கூடுதலாக்குவோம். 100 யூனிட் வரை மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்” என வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு எனவும் உறுதியளித்த கார்கே, “மணிப்பூரில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து பேச மறுக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், அதை காங்கிரஸ் செய்துகொண்டிருக்கிறது. ராகுல் காந்தி செய்துகொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கால் நடையாக நடந்தே இந்தியாவை ஒருங்கிணைத்தார்” என்றும் பேசினார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவோம் என 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது. அத்துடன், விவசாயக் கடன் தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் திமுகவின் தேர்தல் இடம்பெற்றது. இதில் குறிப்பாக திமுகவின் வெற்றிக்கு மகளிர் உரிமைத் தொகை முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை பின்பற்றி காங்கிரஸும் மத்திய பிரதேசத்தில் வாக்குறுதிகளை அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.