மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் சசிகலா? பாயிண்டை பிடிக்க தயாராகும் வழக்கறிஞர் டீம்!

அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும்

பிரிந்திருக்கும் அணிகளை விரைவில் இணைப்பேன் என்றும் கூறி வருகிறார்.

ஆனால் பிரிந்திருப்பவர்களை இணைப்பதற்கான எந்த முயற்சியிலும் அவர் வெளிப்படையாக ஈடுபடவில்லை. இது தொடர்பாக அவரும்

, இபிஎஸ், டிடிவி தினகரன் என சம்மந்தப்பட்ட யாரையும் சென்று சந்திக்கவில்லை. ஓபிஎஸ் தரப்பு சந்திக்க நேரம் கேட்டும் கூட கொடுக்கவில்லை.

அதிமுகவின் பொதுச் செயலாளர் என உரிமை கோரி வருவதால் தினகரனின் அமமுகவினர் தனது படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். தினகரனும் சசிகலாவுக்காக விட்டு வைத்திருந்த தலைவர் பதவியில் முன்னாள் எம்.பி கோபாலை உட்காரவைத்துவிட்டார்.

அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை அவர் சிறை சென்றபிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வண்ண கோலத்தில் சசிகலா – வியக்க வைத்த புதுக்கோட்டை பெண்மணி

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்துசெய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை உரிமையியல் நீதிமன்றம் ஏற்றது. மேலும் வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம், ஆர்.கலைமதி அமர்வில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் சார்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சசிகலா தனது வழக்கறிஞர் அணியுடன் இது தொடர்பாக விவாதித்து வருகிறார்.

ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் சட்டப் போராட்டம் நடத்திய நிலையில் அதில் இபிஎஸ் வெற்றி பெற்று அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் நிலையில் அதிமுகவுக்குள் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.