த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ‘தலைவர் 170’ படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றி கொண்டாட்டம்’ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியல் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் படத்தின் வசூல் குவிந்து வருவதால் படக்குழுவினரும் ஒரே சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ வெற்றி கொண்டாட்டத்துக்கு நடுவில் ரஜினியின் அடுத்த பட வேலைகளும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
தலைவர் 170’ஜெயிலர்’ வெற்றியை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்துக்கு நேர்மாறாக அழுத்தமான திரைக்கதை கொண்ட படமாக ‘தலைவர் 170’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிரட்ட போகும் பகத் பாசில்இந்தப்படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. ‘தலைவர் 170’ படத்திற்கான டெஸ்ட் ஷுட்டையும் ரஜினி நிறைவு செய்து விட்டார். இந்நிலையில் இந்தப்படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலுவாக மிரட்டியிருந்தார் பகத் பாசில். இந்தப்படத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்இந்நிலையில் தற்போது பகத் பாசில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்தப்படத்தில் போலி என்கவுண்டர்களை எதிர்த்து போராடும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர் வசூல்இதனிடையில் ‘ஜெயிலர்’ படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி வெளியான இந்தப்படத்தில் ரஜினி மாஸ் காட்டியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் படத்திற்கு குறைவில்லாமல் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ‘ஜெயிலர்’ படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.