வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிட்னி: பெண்கள் உலக கோப்பை கால்பந்தில் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி வீராங்கனைகளுக்கு, கால்பந்து சங்க தலைவர் பரிசளிப்பின் போது முத்தமிட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், வீராங்கனையை முத்தமிட்டதற்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சாம்பியன்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடந்தது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த பைனலில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மோதின. பெண்கள் உலக கோப்பை கால்பந்து பைனலில் அசத்திய ஸ்பெயின் அணி 1-0 என, இங்கிலாந்தை வீழ்த்தி, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
முத்தம்
பரிசளிப்பு விழாவின்போது ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டியதுடன், ஜெனிபர் ஹெர்மோசா என்ற வீராங்கனையின் உதட்டில் முத்தமிட்டார்.
இதையடுத்து, முத்தமிட்டது சர்ச்சையை கிளப்பியது மேலும் வீராங்கனை ஜெனிபர் ரூபியாலெஸ் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை என்று சமுகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார்.
மன்னிப்பு
இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பல தலைவர்களும் ரூபியாலெஸை கண்டித்ததால் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து கால்பந்து சங்க தலைவர் கூறியிருப்பதாவது: .நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். உற்சாகத்தில் இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர, இதில் உள்நோக்கம் இல்லை.
எனக்கு ஒரு பாடம்
வீராங்கனை ஹெர்மோசாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு கால்பந்து சங்க தலைவராக இருக்கும் போது கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறேன். இது எனக்கு ஒரு பாடம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement