QR குறியீட்டை ஸ்கேன் செய்து, ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு சில நிமிடங்களில் பணம் மாற்றப்படும். அதேபோல், இப்போது உங்கள் இ-சிம் சிம்மை ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு மாற்ற முடியும். இதுதான் அடுத்தக்கட்ட வளர்ச்சி. இப்போது எல்லோரும் பயன்படுத்தும் சிம் கார்டை ஒரு மொபைலில் இருந்து இன்னொன்றுக்கு மாற்ற வேண்டும் என்றால், அதனை தனியே கழற்றி எடுத்துதான் மற்றொரு மொபைலுக்கு மாற்ற முடியும். அப்போது, மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் மொபைலில் இருக்கும் முக்கியமான தகவல்களைக் கூட இதனால் இழக்க நேரிடும். சிம் கார்டில் இருக்கும் மொபைல் நம்பர்கள் எல்லாம் கூட இழக்க வேண்டியிருக்கும்.
இதனை மாற்ற வேண்டும் என்பது குறித்து பல டெக் நிறுவனங்களும் பல்வேறு வழிகளில் பல ஆண்டுகளாக யோசித்துக் கொண்டிருந்தன. அதற்கு மாற்றாக தான் இப்போது வர இருக்கிறது இ- சிம்கார்டு. கூகுள் நிறுவனம் இந்த செயல்முறையை மிக எளிதாக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளது. ஆம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்காக கூகுள் நிறுவனம் UPI போன்று செயல்படும் புதிய செட்டிங்ஸை அறிமுகப்படுத்துகிறது. இதில், QR குறியீட்டின் உதவியுடன் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு இ-சிம் மாற்ற முடியும்.
இ-சிம் பயன்பாடு அதிகரிப்பு?
ஐபோனில் இ-சிம் ஆதரிக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதனுடன், சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இ-சிம் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இ-சிம் என்பது இப்போது இருக்கும் மேனுவல் சிம்மை விட பாதுகாப்பானது. இது மோசடிக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. ஆனால் e-SIM இன் சுற்றுச்சூழல் அமைப்பில் பல சிக்கல்கள் உள்ளன, அதை Google நீக்கப் போகிறது. QR குறியீட்டின் உதவியுடன் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு இ-சிம் மாற்றும் முறையை கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால், வரும் நாட்களில் பிசிக்கல் சிம் டிஸ்சார்ஜ் ஆகலாம்.
இ-சிம் பரிமாற்ற அம்சம் எப்போது தொடங்கப்படும்?
தற்போது புதிய இ-சிம் முறை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும், புதிய இ-சிம் பரிமாற்ற முறையின் வேலிடிட்டி குறித்தும் இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து e-SIM ஐ மாற்றும் அமைப்பின் வளர்ச்சி பயனர்களுக்கு பெரிதும் உதவும். மேலும், அவர்கள் சிம்மை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதன் மூலம் மோசடி வழக்குகள் குறையும்.
குறிப்பு – iOS பயனர்கள் eSIM ஐ ஆன்லைனில் மாற்றலாம். ஆனால் அதன் செயல்முறை மிக நீண்டது. அதே நேரத்தில், இ-சிம் பரிமாற்ற விருப்பம் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களாலும் இன்னும் வழங்கப்படவில்லை.