Google Pixel 8 ல் ஐபோன் ஐடியாவை காப்பி அடித்த கூகுள்? முக்கிய அம்சத்தை கழற்றி தூக்கியெறிய முடிவு!

அக்டோபர் மாதத்தில் கூகுள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான Google Pixel 8 மாடல் மொபைல் வெளியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த மாடலில் ஏராளமான மாற்றங்களை கூகுள் செய்துள்ளதாக பல டிப்ஸ்டர்கள் கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக கூகுளின் முந்தைய மாடல்களில் இடம்பெற்ற முக்கியமான பாகமே புது மாடலில் இடம்பெறாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதன் விவரங்கள் என்ன? மேலும் Google Pixel 8 மாடலில் இடம்பெறவுள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Google Pixel 8 சிம் ட்ரேஅக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படும் Google Pixel 8 மொபைலில் ஐபோன் 14 மாடலை போலவே e-sim பொறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிப்ஸ்டர்கள் சிலர் வெளியிட்டுள்ள படங்கள் மற்றும் தகவல்களின்படி, Google Pixel 8 – ன் மாதிரி படங்களில் Sim Tray- வை காணவில்லை. Google Pixel 7 மற்றும் Google Pixel 6 ஆகிய மொபைல்களில் Sim Tray இடதுபக்கத்தில் பொறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கசிந்துள்ள படங்களில் Google Pixel 8 மாடலில் Sim Tray-வை காணவில்லை. ஐபோன் 14 மாடல் கூட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு Sim Tray இல்லாமல் e-sim வசதியில் தான் வெளியானது. இந்நிலையில் இந்த Google Pixel 8 மாடலும் e-sim வசதியோடு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது முழுமையாக e-sim வசதியில் வெளியாகுமா அல்லது பிஸிக்கல் சிம் வசதி மற்றும் e-sim வசதி ஆகிய இரண்டையும் கொண்டு வெளியாகுமா அல்லது பிஸிக்கல் சிம் வசதியை கொண்டு மட்டுமே வெளியாகும் என்பது தெளிவாக தெரியவில்லை.கூகுள் பிக்ஸல் 8​​Google Pixel 8 கேமராGoogle Pixel 8 மொபைலில் கேமரா மட்டுமின்றி கேம் செயலியின் அமைவுகளில் கூட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கேமராவை இயக்கும் பட்டன் மற்றும் இமேஜ்களை பார்க்கும் வசதி ஆகியவை இருந்த இடங்கள் மாற்றப்பட்டுள்ளதாம். மேலும், போட்டோ மற்றும் வீடியோ ஆகியவற்றிற்கான செட்டிங்ஸ்களும் கூட மாற்றப்பட்டுள்ளனவாம்.
கேமராவை பொறுத்தவரை Google Pixel 8 ப்ரோ மாடலில் OIS சப்போர்ட்டோடு கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 64 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் சென்ஸார் மற்றும் 48 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ கேமரா ஆகியவையும், Google Pixel 8 மாடலில் OIS சப்போர்ட்டோடு கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி சாம்சங் ISOCELL GN2 சென்ஸார் மற்றும் 12 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் கேமரா ஆகியவையும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ப்ராசஸர், டிஸ்பிளே மற்றும் சார்ஜிங்Google Pixel 8 series மொபைல்களில் Tensor G3 சிப் பொறுத்தப்படலாம் என்று கணித்துள்ளனர் டெக் வல்லுநர்கள். மேலும், 6.7 இன்ச் OLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சார்ஜிங் வசதியை பொறுத்த வரை ப்ரோ மாடல்களில் 4,950mAh திறன் பேட்டரி மற்றும் 27W வேகமான சார்ஜிங் வசதியும், Google Pixel 8 மாடலில் 4,485mAh திறன் பேட்டரி with 24W வேகமான சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்டோரேஜ் மற்றும் அம்சங்கள்e-sim போலவே புதிதாக வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வசதியுள்ள தெர்மோமீட்டர் வசதியும் இந்த மொபைலில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் உங்கள் வீடியோக்களில் தேவையில்லாத ஆடியோ ஏதாவது பதிவாகியிருந்தால் அதை அழிக்கும் வண்ணம் “ ஆடியோ மேஜிக் எரேசர் “ வசதியும் இதில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. ஸ்டோரேஜை பொறுத்தவரை 128GB மற்றும் 256GB ஆகிய ஆப்ஷன்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.