Realme GT 5 வெளியாகும் தேதி அறிவிப்பு! அதிநவீன டெக்னாலஜி மற்றும் புது ஸ்டைலில் அறிமுகமாக போகுதாம்!

சமீபத்தில் ரியல்மீ நிறுவனத்தின் தலைவரான சூ குய் சேஸ் Realme GT 5 வெளியீடு தேதி குறித்தும் அதில் 24GB ரேம் வசதிஇடம்பெறுவது குறித்தும் தகவல் ஒன்றை Weibo தளத்தில் பதிவிட்டிருந்தார். Realme GT 5 மொபைலோடு சேர்த்து Realme Buds Air 5-ம் அதே நாளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் டெக் வல்லுநர்கள் சிலரும் மேலும் என்னென்ன சிறப்பம்சங்கள் Realme GT 5 மாடலில் இடம்பெறப் போகிறது என்றும், வெளியீட்டு தேதிகள் குறித்தும் தங்களுக்கு கிடைத்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

ஸ்டோரேஜ் வசதி மற்றும் விலைஇதன் ஸ்டோரேஜ் வசதி 24GB ரேம் மற்றும் 1TB வரை வழங்கப்படலாம் என்று அந்நிறுவனத்தின் தலைவர் தகவலின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், Realme GT 3-ன் விலை இந்திய மதிப்பில் ரூ.52,000 என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் Realme GT 5ம் அதற்கு மேல் விற்பனை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தற்போதைய தகவல்களின்படி ஆகஸ்ட் 28ம் தேதி சீனாவில் மட்டும்தான் வெளியாகிறது Realme GT 5. இந்தியாவில் அதன் வெளியீடு குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.
ப்ராசஸர் மற்றும் பேட்டரிRealme GT 5-ல் அதிநவீன ப்ராசஸரான Qualcomm Snapdragon 8 Gen 2 SoC இடம்பெற்றுள்ள தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் சூ குய் சேஸ் சமூக ஊடக பதிவு மூலம் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இதன் நீடித்த செயல்பாட்டிற்காக 4,600mAh திறன் கொண்ட பேட்டரி 240W சார்ஜிங் வசதி அல்லது 5,200mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 150W சார்ஜிங் வசதி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இடம்பெறலாம் என்றும் டெக் டிப்ஸ்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
டிஸ்பிளே, கேமரா மற்றும் டிசைன்Realme GT 5-ல் 6.74-inch 1.5k OLED டிஸ்பிளே இடம்பெறும் எனவும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம் என்றும் டிப்ஸ்டர்கள் கூறியுள்ளனர். இதே இதற்கு முன்னால் வெளியான Realme GT 3-ல் 6.74-inch AMOLED டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரஷ் ரேட் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கேமராவை பொறுத்தவரை Sony IMX890 சென்சாருடன் கூடிய 50-மெகாபிக்ஸல் கேமரா, 8MP கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவை இடம்பெறலாம் என்றும் பல டிப்ஸ்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிறந்த செல்ஃபீ கேமராவுக்காக 16MP கேமரா வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.