அசால்டா ரூ. 550 கோடி வசூலித்த ரஜினியின் ஜெயிலர்: இன்னும் 2 நாளில்….

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தொடர்ந்து வசூல் சாதனைகள் செய்து கொண்டிருக்கிறது.

​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், வசந்த்ரவி, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. வார நாட்களில் கூட ஜெயிலர் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படம் ரிலீஸான 12 நாட்களில் உலக அளவில் ரூ. 550 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விஜய் தேவரகொண்டா​ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda..​​ரூ. 291.80 கோடி​தமிழகத்தில் இந்த ஆண்டு ரிலீஸான தமிழ் படங்களில் பெரிய ஓபனிங் கிடைத்தது ஜெயிலருக்கு தான். ஜெயிலர் படம் 13 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 291.80 கோடி வசூல் செய்திருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவிலேயே ரூ. 300 கோடியை தாண்டிவிடும் என்று நம்பப்படுகிறது. நேற்று வேலை நாள் தான் என்றாலும் ஜெயிலர் இந்தியாவில் ரூ. 4.5 கோடி வசூல் வசூல் செய்திருக்கிறது.

​சாதனை​வெறும் 12 நாளில் பொன்னியின் செல்வன் சாதனையை முறியடித்த ஜெயிலர்: அலப்பறையை கெளப்பும் ரஜினிஇந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது ஜெயிலர். அந்த பெருமைக்குரிய பொன்னியின் செல்வன் படத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டது. இந்தியாவில் அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் படமாக உலக நாயகன் கமல் ஹாசனின் விக்ரம் இருக்கிறது. ஜெயிலரின் சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினி படத்தால் தான் முடியும் என்கிறார்கள் ரசிகர்கள்.

​வெளிநாடுகள்​ஜெயிலர் சாதனை: ஷங்கர், மணிரத்னத்தை அடுத்து நெல்சனுக்கு கிடைத்த கவுரவம்அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஜெயிலர். வட அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக இருக்கிறது ஜெயிலர். ஆஸ்திரேலியாவிலும் ஜெயிலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜெயிலர் வெற்றியால் ரூ. 500 கோடி வசூல் கொடுத்த இயக்குநர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். 2.0 படத்திற்காக ஷங்கரும், பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னமும் ரூ. 500 கோடி இயக்குநர்கள் கிளப்பில் முன்பே சேர்ந்துவிட்டார்கள்.

​இமயமலை​யோகிகள் காலில் விழுவது என் வழக்கம், அதை தான் செய்தேன்: ரஜினிஜெயிலர் படம் ரிலீஸானதில் இருந்தே சமூக வலைதளங்களில் அதன் வசூல் சாதனை பற்றி தான் பேச்சாக உள்ளது. ஜெயிலர் படத்தில் நடித்து முடித்ததும் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். அவர் அங்கு சென்றதால் தான் ஜெயிலர் படம் ஹிட்டாகியிருப்பதாகவும் பேசப்படுகிறது. மேலும் இமயமலை பயணத்திற்கும், தன் பட வெற்றிக்கும் தொடர்பு இருப்பதாக ரஜினியும் நினைக்கிறார்.

​தலைவர் 170​ஜெயிலரை அடுத்து ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. அந்த படத்திற்கான லுக் டெஸ்ட்டில் கலந்து கொண்டுவிட்டு தான் இமயமலைக்கு சென்றார். படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலரின் இமாலய வெற்றியால் அனைவரின் கவனமும் தலைவர் 170 பக்கம் திரும்பியிருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் அந்த படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினி. ஞானவேலுக்காக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.