அதற்கெல்லாம் நேரமே இல்லை..ரொம்ப பிசியா இருக்கேன்..ஆதங்கப்பட்டு பேசிய அஜித்..!

அஜித்தின் விடாமுயற்சி படம் எப்போது துவங்கும் என்ற கேள்வி தான் அஜித் ரசிகர்களின் மனதில் இருந்து வருகின்றது. துணிவு என்ற வெற்றி படத்தை கொடுத்து எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றளவும் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக மே மாதம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதன் பிறகு படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதன் காரணமாக இப்படத்தை பற்றி பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. கடந்த சில நாட்களாக விடாமுயற்சி திரைப்படம் கைவிடப்பட இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்திதான், கண்டிப்பாக விடாமுயற்சி படம் விரைவில் துவங்கும் என தகவல்கள் வருகின்றன.

நேரமே கிடைக்கவில்லை

இந்நிலையில் அஜித் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது அஜித் தற்போது தான் பேட்டிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வருகின்றார். ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை அஜித் பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்துள்ளார்.

லியோ இசை வெளியீட்டு விழா எங்கே ? எப்போது ? முடிவெடுத்த தளபதி..உறுதியான இடம்..!

குறிப்பாக ஆரம்பகாலகட்டத்தில் அஜித் நிறைய பேட்டிகளை கொடுத்துள்ளார். மிகவும் கலகலப்பாக, வெளிப்படையாக அந்த பேட்டிகளில் பேசியிருப்பார் அஜித். அந்த வகையில் 1998 ஆம் ஆண்டு அஜித் கொடுத்த பேட்டி ஒன்று தான் தற்போது வைரலாகி வருகின்றது. மிகவும் கேஷுவலாக அஜித் புள் தரையில் உட்கார்ந்து அந்த பேட்டியில் பேசியிருப்பார்.

ஆதங்கப்பட்ட அஜித்

படங்களை பற்றி பல விஷயங்களை பேசிய அஜித் அவரது பொழுதுபோக்கு என்னென்ன என்பதை பற்றியும் பேசியிருப்பார். அவர் கூறியதாவது, நான் அனைவரிடமும் கலகலப்பாக பேசக்கூடிய தன்மையுடையவன். அதனால் எனக்கு நண்பர்கள் அதிகம். மேலும் எனக்கு ட்ராவல் செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் நேரமே கிடைக்கவில்லை. எப்போதும் ஷூட்டிங் ஷூட்டிங் என பிசியாக போய்க்கொண்டிருக்கிறது. ஷூட்டிங் இல்லாமல் ஒரு நாள் கிடைத்தால் கூட தூங்கலாம் என தான் தோன்றுகிறது என ஆதங்கப்பட்டு பேசினார் அஜித்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்த பேட்டியை பார்த்த அஜித் ரசிகர்கள், நம்ப அஜித்தா இப்படி ஜாலியாக பேசியிருக்கிறார் என ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர். அந்த காலகட்டத்தில் அஜித் ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார். ஒரே வருடங்கள் குறைந்தது அவரின் ஐந்து படங்களாவது வெளியாகும். அந்த அளவிற்கு பிஸியான நடிகராக இருந்து வந்துள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.