ஜோகன்னஸ்பர்க் : ”எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜினாக இந்தியா உருவெடுக்கும்,” என பிரதமர் மோடி பேசினார்
தென் ஆப்ரிக்காவில் பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜினாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவில் தொழில் செய்வதை எளிமையாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களையும் எங்கள் அரசு மேற்கொண்டு வருகிறது. விரைவிலேயே இந்திய பொருளாதாரம், 410 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாறும். உலகில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதில், 800 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள, 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement