சந்திரயான் -3க்கு பிறகு என்ன?: இஸ்ரோவின் புதிய திட்டங்கள் தெரியுமா?| Chandrayaan: What After Chandrayaan-3? ISROs Long List Of Missions After Moonshot

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தென் பகுதியில் தரையிறக்கி சாதனை படைக்க உள்ள நிலையில் இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் சில:

சூரியனை ஆய்வு செய்ய திட்டம்

நிலவை ஆய்வு செய்யும் திட்டம் முடிந்த உடன் சூரியனை ஆய்வு செய்வதில் இஸ்ரோ தனது கவனத்தை திருப்ப உள்ளது. இதற்காக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆதித்யா எல்1 என்ற விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் நிலை நிறுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்

சக்திவாய்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை தயாரித்து அனுப்புவதற்கு இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. பெங்களூருவில் தயாராகி வரும் இந்த செயற்கைக்கோள், அடுத்தாண்டு ஏவப்படும் என தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம், வனப்பரப்புகளை அழிவு, எரிமலை மற்றும் பூகம்பம் குறித்து ஆராயும் எனவும் தெரியவந்துள்ளது.

ககன்யான் திட்டம்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக உள்ளது. இதற்காக ககன்யான் திட்டம் தயாராக உள்ளது. 2020 இதனை செயல்படுத்த திட்டமிட்ட நிலையில், கோவிட் பெருந்தொற்று காரணமாக இது தாமதம் ஆகி உள்ளது. விண்வெளியில், இந்தியாவைச் சேர்ந்த 3 வீரர்களை 3 நாட்கள் தங்கியிருந்து பிறகு பத்திரமாக பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல, இன்னும் பல திட்டங்களுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.