மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு வழங்குவதற்காக சபரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்கவின் கோட்பாட்டிற்கு இணங்க ஆரம்பிக்கப்பட்ட ஆளுநரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டம் நேற்று (22) வரக்காபொல, தொல்கமுவ டட்லி சேனாநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
நடமாடும் சேவைக்கு ஈடாக கேகாலை தெதிகம மகபல்லேகம சேனாநாயக வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆங்கில செயன்முறை பிரிவு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. இந்த ஆங்கிலச் செயல்பாட்டுப் பிரிவு 40 மடிக் கணனிகளுடன் ஸ்மார்ட் பலகை இரண்டும் பொருத்தப்பட்டு பூரண நட்பு வகுப்பறையாக அமைக்கப்பட்டுளள்து.
அதேவேளை 36 மில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்தப்பட்ட 300 குடும்பங்களுக்கு செத செலசென பெரும் போக நீர்ப்பாசனத் திட்டத்தையும் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்வும் மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் ஆளுநரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாங்கல்ல ஹபீஸ் வீதி திருத்தப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்விலும் ஆளுநர் நவீன் திசாநாயக்க கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜிகா விக்ரமசிங்க, உதயகாந்த குணதிலக உட்பட மாவட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.