பெங்களூரு : ”எம்.பி.பி.எஸ்., படிக்கும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கடன் தொகையை, 5 லட்சம் ரூபாயாகவும், வெளிநாடுகளில் படிக்கும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு, 20 லட்சத்தில் இருந்து, 30 லடசம் ரூபாயாகவும் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது,” என, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தற்போது கே.எம்.டி.சி., எனும் கர்நாடக சிறுபான்மையினர் வளர்ச்சி ஆணையம் சார்பில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஏழை குடும்பங்களின் குழந்தைகள் உயர்கல்விக்கு உதவும் என்பதால், கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதுபோன்று சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் பட்டப்டிப்பு அல்லது முதுகலை படிக்க விரும்பினால், தற்போது 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதை 3 லட்சம் ரூபாயாக வழங்க யோசித்து வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு வாரிய திட்டங்கள், மாநிலத்துக்கு வரவில்லை. இந்தாண்டு மானியம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement