திருப்பதி செல்லும் பக்கதர்களுக்கு இனி அந்த கவலை வேண்டாம்… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்கதர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருப்பதிஉலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களை தவிர்த்து, நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல்லாயிர்க்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பதி பக்தர்கள்திருப்பதி வெங்கடேச பெருமாள் பல தொழில் அதிபர்களுக்கு பிஸ்னஸ் பார்ட்னராகவும் உள்ளார். திருப்பதி ஏழுமலையான் வேண்டும் வரங்களை தருபவர், வேண்டுதல்களை நிறைவேற்றுபவர். இதனை அனுபவ ரீதியாக உணர்ந்த மக்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருப்பதி ஏழுமலையான தரிசித்து வருகின்றனர்.
திருப்பதி தரிசனம்
திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பது பக்தர்கள் மத்தியில் காலம் காலமாக இருந்துவரும் நம்பிக்கை. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏழை எளிய மக்கள் முதல் சினிமா, விளையாட்டு மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆண்டுதோறும் திருமலை திருப்பதிக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
திருப்பதி கூட்டம்இதனால் வார இறுதி நாட்கள், விசேஷ நாட்கள், விடுமுறை நாட்கள் என அனைத்து நாட்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய வசதி
இந்நிலையில் திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேவஸ்தான நிர்வாகம். அதாவது திருமலைக்கு செல்லும் பக்தர்கள் லக்கேஜ்களை எடுத்து செல்வதற்கு வசதியாக புதிய லக்கேஜ் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பாலாஜி பேக்கேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

லக்கேஜ் டெபாசிட்பக்தர்களின் லக்கேஜ்கள் இனி இந்த புதிய மென்பொருள் சேவை மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி அமைப்பு பக்தர்களின் உடைமைகள் மற்றும் அவர்களின் மொபைல் போன் ஆகியவற்றை டெபாசிட் செய்வதை எளிதாக்கியுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக தங்களின் உடைமைகளை டெபாசிட் செய்து தரிசனத்திற்கு பிறகு அவற்றை மீட்டுகொள்ளலாம்.
​ வந்தே பாரத் ரயில விட அதிக வேகம்… டிக்கெட் விலையும் கம்மி… புஷ் புல் ரயில் சேவையை தொடங்கும் இந்திய ரயில்வே!​தர்மா ரெட்டி
இதுகுறித்து TTD செயல் அலுவலர் தர்மா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், லக்கேஜ் மையங்களில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க நன்கொடையாளர்கள் உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த லக்கேஜ் மையம் பாலாஜி பேக்கேஜ் சென்டர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் முறையில்இதுவரை, திருமலையில் கால் நடையாக ஏறும் பக்தர்களின் லக்கேஜ்கள் , மலைக்கு கைமுறையாகக் கொண்டு செல்லப்பட்டன என்றும் தற்போது விஜிலென்ஸ் அதிகாரிகள், நன்கொடையாளர்கள் உதவியுடன் விமான நிலையங்களில் லக்கேஜ் செல்லும் வகையில் மென்பொருளை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். பக்தர்களின் தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் அவர்களின் லக்கேஜ் மற்றும் மொபைல் போன்களின் விவரங்களுடன் சேமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

​ மீண்டும் ஃபார்முக்கு வரும் இலங்கை… குவியும் சுற்றுலா பயணிகள்… குதூகலிக்கும் நிர்வாகம்!​க்யூஆர் குறியீடுதரிசன டிக்கெட் இல்லாதவர்களுக்கு, லக்கேஜ்களை ஸ்கேன் செய்யும் போது ஒரு தனித்துவமான ரேடியோ அலைவரிசை அடையாள (RFID) குறியீடு உருவாக்கப்படுகிறது என்றும் அதனுடன் QR குறியீடு ரசீது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். . மொபைல் போன் டெபாசிட்களுக்கு, ஸ்ரீவாரி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் க்யூஆர் குறியீடுகளுடன் பக்தர்களின் ஆதார் விவரங்களை இந்த புதிய மென்பொருள் சேகரிக்கும் என்றும் இதனால் லக்கேஜ்கள் எளிதாக கண்காணிக்கப்பட்டு மீட்டுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.
எஸ்எம்எஸ்மேலும் பக்தர்கள் தங்கள் உடமைகளின் வருகை நேரத்தைப் பற்றிய எஸ்எம்எஸ் அறிவிப்புகளைப் பெறுவார்கள் என்றும் லக்கேஜ் கவுண்டர்களை அடைந்ததும், க்யூஆர் குறியீடு ரசீதுகள் ஸ்கேன் செய்யப்பட்டு திரைகளில் உடைமைகள் பெறப்படுவதை உடனடியாகக் காண்பிக்கும் என்றும் கூறியுள்ளார். பின்னர் பக்தர்களின் உடைமைகள் தள்ளுவண்டிகளில் ஏற்றப்பட்டு உரிய கவுன்டர்களுக்கு அனுப்பப்படும் என்றும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
​ ப்பா… பால்கோவா போல் இருக்கும் கேத்ரின் தெரேசா… அசர வைக்கும் புகைப்படங்கள்!​இலவச பேக்கேஜ் மையங்கள்
இந்த புதிய சேவை ஒரு மாதத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்பட்டு ஒரு நாளில், 16 மையங்களில் 44 கவுன்டர்கள் மூலம், 60,000 மொபைல்கள் மற்றும் 40,000 பேக்கேஜ் பொருட்கள் டெபாசிட் செய்யப்பட்டு, சிரமமின்றி டெலிவரி செய்யப்படுகிறது. இதற்காக வைகுண்டம் வரிசை வளாகம், ரூ.300 சிறப்பு தரிசனம், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி நடைபாதைகளில் இலவச பேக்கேஜ் மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு கவலை இருக்காதுஇந்த புதிய மென்பொருள் சேவையின் மூலம் பக்தர்களின் உடமைகள் நவீன முறையில் டெபாசிட் செய்யப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது. இந்த சேவையின் மூலம் பக்தர்கள் தங்களின் உடைமைகளை எளிதாக கண்காணித்து பெற்றுக்கொள்ளலாம். இதனால் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தங்களின் உடைமைகள் குறித்த கவலை இனி இருக்காது என கூறப்படுகிறது.​ சென்னை தினம்… ரிப்பன் கட்டடத்தில் சென்னை நகரின் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.