ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை தலைமையிடமாக கொண்டு 2019-ல் தொடங்கப்பட்ட அமுச்சுரபி சிக்கனம் மற்றும் கடன் சங்கம் தமிழகம் முழுவதும் 86 கிளைகளுடன் முதலீடுகளை ஈர்த்தது. அதில் சேலத்தில் அழகாபுரம், அயோத்தியாபட்டணம் ஆகிய இரு இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கிய இந்த நிறுவனம், கஸ்டமர்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும், பல மடங்கு வட்டி தருவதாக கூறி பணத்தை பெற்றுள்ளனர். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிளையில் நேரடியாக பணத்தை கலெக்ஷன் செய்ய கலெக்ஷன் ஏஜென்ட் நியமிக்கப்பட்டனர். அவர்களை வைத்து கஸ்டமர்களிடம் இருந்து பணம் பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒவ்வொரு கிளையாக மூடப்பட்டு வந்த நிலையில், முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் என்பவர், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதில், தான் அயோத்தியாபட்டினம் சங்கத்தில் 2.92 லட்சம் ரூபாய் முதலீடு செய்து திரும்பக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் மூலம் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் மொத்தம் 1307 பேரிடம் 58 கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இது தொடர்பாக வழக்கு பதிந்து சங்க தலைவர் ஜெயவேல் கணக்காளர் கண்ணன் இயக்குநர்கள் தங்கப்பழம் சரண்யா ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற காவல் விசாரணையில் மோசடி பணத்தில் பெருந்தொகை சங்க மேலாளர் பிரேம் ஆனந்த் வசம் இருப்பதாக தங்கப்பழம் வாக்குமூலம் கொடுத்தார். அதன் மூலம் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் பிரேம் ஆனந்த் போலீஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதை அடுத்து கோவை டான்பீட் நீதிமன்றத்தில் கடந்த 14-ம் தேதி பிரேம் ஆனந்த் சரணடைந்தார். போலீஸாரின் கோரிக்கையை ஏற்று ஆறு நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 17 தொடங்கிய விசாரணை ஒரு நாள் முன்னதாகவே முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரேம் ஆனந்த் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் பிரேம் ஆனந்த், `அமுத்சுரபி நிறுவனம் தொடங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் பணம் புழக்கம் ஏற்பட்டது. இதனால் சங்க உறுப்பினர்கள் ஆலோசனைப்படி பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு பெயரில் தொடங்கினோம். அதன் மூலம் ஒரு தனி வருமானம் எங்களுக்கு கிடைத்தது. இந்த நிலையில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு ஒவ்வொருவரும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில், நிலங்கள், ஹோட்டல்ஸ், அப்பார்ட்மென்ட் என வாங்கி போட்டுள்ளோம்.
மேலும் சினிமா கம்பெனி ஒன்று தொடங்கியிருந்தேன். அதன்மூலம் டிரெண்டிங்கில் இருந்த சீரியல் நடிகைகள் முதல் சினிமா நடிகைகளை வைத்து சினிமா எடுத்தேன். பலர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் வாய்ப்பு கேட்டு வருகோரிடமும் பணம் வசூலித்தேன். மேலும் மீதமுள்ள பணத்தை 10 கோடி ரூபாயை சங்க இயக்குனர் தங்கப்பழம் வசம் கொடுத்து விட்டேன். அவர் மணப்பாறை பகுதியில் நிலம் வாங்கியுள்ளார். மேலும் சங்க நிதியில் ஏற்காட்டில் வாங்கிய 4 ஏக்கர் நிலம் சென்னை தி. நகரில் உள்ள என் மாமா மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பிரேம் ஆனந்தின் வாக்குமூலத்தின் படி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி சுந்தரத்தின் மூலம் தொடங்கப்பட்ட ஆன் ஆக்சன் மீடியா நிறுவனத்துக்கு நேரில் சென்ற போது அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது தெரிந்தது. இதையடுத்து சேலத்தில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் சோதனையிட்டனர்.
அதில் ஒரு லேப்டாப் சங்க ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிய தகவல்கள் என 44 பக்கம் கொண்ட ஆவணங்கள் சிக்கியுள்ளதுசிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY