இந்தியாவில் அதிக வரவேற்பினை பெற்ற ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக்கில் சிறப்பு ஸ்டெல்த் லிமிடெட் எடிசன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
சாதாரண மற்ற மாடலை விட வித்தியாசப்படுத்தும் வகையில் முழுமையான கருப்பு நிறத்தை பெற்ற ஸ்டெல்த் எடிசன் கோல்டு நிற யூஎஸ்டி ஃபோர்ட் மற்றும் மஞ்சள் நிற மோனோ ஷாக் அப்சாபர் உள்ளது.
Revolt RV400
RV400 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து அதே 3.24 kWh பேட்டரி பேக்கை 3 kW மிட்-டிரைவ் மோட்டார் பெற்றுள்ளது. ஆர்வி400 மோட்டார்சைக்கிள் முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். முழு சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்லும் என்று ரிவோல்ட் கூறுகிறது.
2023 அக்டோபரில் டெலிவரிகள் தொடங்கும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் மாடல் கிடைக்கும் என்று ரிவோல்ட் கூறியுள்ளது.
ரூபாய் 5,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக்கின் ஸ்டெல்த் லிமிடெட் எடிசன் விலை ரூபாய் 1.50 லட்சம் ஆகும்.