வேளாங்கண்ணி மாதா திருவிழா: எந்தெந்த ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள்? போக்குவரத்துக் கழகம் செம ஏற்பாடு!

வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை தாம்பரம் – வேளாங்கண்ணி – தாம்பரம் இடையே சிறப்பு கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட உள்ள சிறப்பு ரயில் (06003) மறுநாள் காலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.!

ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல் அந்த ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்தும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை இரவு / பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்), கும்பகோணம் சார்பாக இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர்.

எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்று போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.