சென்னை: இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் பெரும் சாதனை நிகழ்வான இதனை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியை பாராட்டி கமல், சிம்பு, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/home-1692802484.jpg)