Hero Karizma XMR Mileage – ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் மைலேஜ் மற்றும் என்ஜின் விபரம் வெளியானது

வரும் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் ஹீரோ கரீஸ்மா XMR 210 ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ரக பைக்கின் அறிமுகத்திற்கு முன்பாக பல்வேறு டீசர்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டு வருகின்றது.  இந்த டீசர் மூலம் 210cc லிக்யூடு கூல்டு DOHC  என்ஜின் பெறுவது உறுதியாகியுள்ளது.

முதன்முறையாக ஹீரோ மோட்டோகார்ப் தனது பைக் மாடலில் லிக்யூடு கூல்டு என்ஜின், 6 ஸ்பீட் கியர்பாக்ஸ், DOHC, டூயல் சேனல் ஏபிஎஸ் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை போட்டியாளர்களுக்கு எதிராக களமிறக்க உள்ளது.

Hero Karizma XMR Fuel Efficiency

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் பொருத்தப்பட உள்ள 210சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று அனேகமாக 24 ஹெச்பி பவர் மற்றும் 21 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது.

2023 ஹீரோ கரீஸ்மா XMR பைக்கின் மைலேஜ் சராசரியாக 32.8 kmpl கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த பைக்கின் டாப் மணிக்கு 150 கிமீ வரை எட்டலாம்.

பிரேக்கிங் அமைப்பில் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இருவிதமான வேரியண்டுகளை பெற வாய்ப்புள்ளது. மேலும் இந்த மாடலின் டாப் வேரியண்டில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்க எல்சிடி கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு ஹீரோ கனெக்டேட் 2.0 அம்சத்தை பெற்றக்கூடும்.

karizma xmr 210 engine details

கரீஸ்மா மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டு 17 அங்குல வீல் பொருத்தப்பட்டிருக்கலாம். முழுமையாக ஸ்போர்ட்டிவ் எல்இடி ஹெலைட் பெற்றதாகவும், டெயில் லைட் எல்இடி ஆக அமைந்திருக்கும்.

2023 ஹீரோ மோட்டோகார்ப் கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை ரூ.1.80 லட்சத்துக்குள் துவங்கலாம்  என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடல் பஜாஜ் பல்சர் RS 200, யமஹா R15 மற்றும் சுசூகி ஜிக்ஸர் SF 250 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதால், முழுமையான விபரங்கள் அன்றைக்கு வெளியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.