Oneplus Open: Snapdragon 8 Gen 3 SoC ப்ராசஸர், 7.8 இன்ச் டிஸ்பிளே என ஏராளமான அப்டேட்! ஆகஸ்ட் 29 வெளியீடு?!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் Fold வகை தயாரிப்பான Oneplus open இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பல்வேறு லீக்ஸ்டர்களும் பல தகவல்களை கசிய விட்டு வருகின்றனர். அவர்களின் கூற்றுப்படி பெரிய டிஸ்பிளே, அதிநவீன ப்ராசஸர் என பல புது அப்டேட்களோடு களம் இறங்க காத்திருக்கிறது Oneplus Open .

கேமராPC : ONLEAKS/SMARTPRIXSlashleaks கணிப்பின்படி, Oneplus open – ல் 48MP + 48MP u- + 64MP டெலிபோட்டோ கேமரா மற்றும் வெளிப்புறத்தில் 32 மெகாபிக்ஸல் கேமரா, உள்புறத்தில் முன்பகுதியில் 20 மெகாபிக்ஸல் கேமரா ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி மற்றும் இதர விவரங்கள்PC : ONLEAKS/SMARTPRIX​
Slashleaks தகவலின்படி, Oneplus open மொபைலில் 4800mAh திறன் பேட்டரி மற்றும் 67W வேகமான சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தகவல் கசிந்துள்ளது. மேலும், டிப்ஸ்டர் மாஸ் ஜம்பர் அளித்துள்ள தகவலின்படி Oneplus Open மாடல் Emerald Eclipse மற்றும் Voyage Black ஆகிய நிறங்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
​Oneplus Open ப்ராசஸர்
PC : ONLEAKS/SMARTPRIXஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் Oneplus நிறுவனத்தின் ஃபோல்ட் மாடலான Oneplus Open மாடலில் Snapdragon 8 Gen 3 SoC ப்ராசஸர் இடம்பெறும் என்று Slashleaks என்ற லீக்ஸ்டர் தகவல் வெளியிட்டுள்ளார்.
​Oneplus Open டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ்PC : ONLEAKS/SMARTPRIX​
Oneplus open – ல் 7.8″ 2K foldable 120Hz AMOLED மற்றும் 6.3″ outer 120Hz AMOLED டிஸ்பிளே இடம்பெறும் என்று Slashleaks கூறியுள்ளார். Oxygen OS 13.1, Android 13 – ஐ அடிப்படையாக கொண்டு இந்த மாடல் இயங்குமாம். மேலும் இது 16GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதியோடு வெளியாகலாம் என்றும் லீக்ஸ்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.