டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் பேட்டரி மின்சார ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 105 Km/hr பெற்று ஏபிஎஸ், ஆஃப் செட் மோனோஷாக் சஸ்பென்ஷன் உட்பட க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றை பெற்றுள்ளது.
க்ரீயோன் எலக்ட்ரிக் கான்செப்ட்டை உற்பத்தி நிலைக்கு எடுத்துச் சென்றுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பல்வேறு நவீனத்துவமான அம்சங்கள் முதன்முறையாக பல்வேறு வசதிகளை பெற்று மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.
TVS X Electric Scooter
டிவிஎஸ் அறிமுகம் செய்துள்ள XLeton பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ் எலக்ட்ரிக் மாடலில் 3.8 Kwh பேட்டரி கொண்டு பவர் 11 Kw வெளிப்படுத்தும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 140 கிமீ ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.6 வினாடிகள் போதுமானதாக உள்ளது. 0-80 % சார்ஜிங் செய்ய 3 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
X எலகட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்டெல்த், ஸ்டிரைட் மற்றும் சோனிக் என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணம் ரூ.5000 வசூலிக்கப்படுகின்றது.
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ₹ 2,49,900