![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692903134_NTLRG_20230824144801651098.jpg)
இதோடு ரிட்டயர் ஆகிவிடு : விஜய் பட நாயகிக்கு பாலிவுட் இயக்குனர் பாராட்டு
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாலிவுட்டில் சன்னி தியோல் நடிப்பில் வெளியான படம் 'கடார் 2'. ஒரு பக்கம் அக்சய் குமாரின் ஓ மை காட்-2 இன்னொரு பக்கம் ஜெயிலர் ஹிந்தி வெர்ஷன் என இரண்டு படங்கள் வெளியான நிலையில் அவற்றை எதிர்கொண்டு வெளியான கடார்-2 திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கு விமர்சனங்களும் பாசிட்டிவாகவே கிடைத்தன.
இந்த படத்தில் கதாநாயகியாக அமிஷா பட்டேல் நடித்துள்ளார். அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியும் தனது பாராட்டுகளை அமிஷா பட்டேலுக்கு தெரிவித்துள்ளார். அதே சமயம் அவர் ஒரு முக்கியமான விஷயத்தையும் அமிஷா பட்டேலிடம் கூறியுள்ளார்.
இதுபற்றி அமிஷா பட்டேல் கூறும்போது, “இந்த படத்தை பார்த்ததும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி என்னை அழைத்து இந்த படத்துடன் நீ ரிட்டயர்டு ஆகிவிடு என்று கூறினார். நான் எதுவும் புரியாமல் ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர், இங்கே பல நடிகைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நடித்து பெற முடியாத பெயரையும் பெருமையும் வெறும் இரண்டு படங்களில் நீ பெற்று விட்டாய்.. இனி நீ சாதிக்க வேண்டியது என்ன இருக்கிறது என்று கூறினார். அவரது பாராட்டை விருது போல கருதுகிறேன்” என்று கூறியுள்ளார் அமிஷா படேல்.