வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றது குறித்து பிரிட்டன் டி.வி. சேனல் நெறியாளர், இனி பிரிட்டன் அரசிடம் இந்தியா நிதி கேட்க கூடாது எனவும், ஏற்கனவே வழங்கிய நிதியை இந்தியா திருப்பித் தர வேண்டும் என டுவிட் செய்தார், இதற்கு பதிலடியாக இந்தியாவை ஆண்ட பிரிட்டன் நாட்டவர்கள் இந்தியாவில் கொள்ளையடித்து சென்ற 45 டிரில்லியன் சொத்துக்களை திரும்ப தர வேண்டும் என நெட்டிசன்கள் டுவிட் செய்து வருவது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சந்திரயான் – 3′ விண்கலம் நிலவில் பத்திரமாக நேற்று தரையிறக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் முதன்முறையாக இந்தியா சாதனையை பதிவு செய்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்விற்கு உலக விஞ்ஞானிகளும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பிரிட்டனிலிருந்து ஒளிரப்பாகி வரும் ஜி.பி. நியூஸ் செய்தி சேனலின் பாட்ரிக் கிறிஸ்ட் என்ற நெறியாளர், எக்ஸ் எனப்படும் டுவிட்டர் வலைதளத்தில், இந்தியா சந்திரயான் -3 திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்கு பாராட்டுக்கள், அதே நேரம் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து 2021 வரை பிரிட்டனிடமிருந்து வாங்கிய 2.3 பில்லியன் பவுண்ட் ( ரூ. 24 ஆயிரம் கோடி) வெளிநாட்டு நிதியை திரும்ப தர வேண்டும். இனி பிரிட்டனிடம் இந்தியா நிதி கேட்க கூடாது. இதனை பிரிட்டன் அரசு இந்தியாவிடம் எடுத்துரைக்க வேண்டும் என பதிவேற்றினார்.
இவரது பதிவேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவிற்கு ஆதரவாக நெட்டிசன்கள் கூறியது, பிரிட்டன் நாட்டவர்கள் இந்தியா ஆண்ட போது பிரிட்டன் ராணி வைத்துள்ள கோஹினுர் கிரீடம் உள்பட 42 டிரில்லியன் மதிப்பிலான சொத்துக்களை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதனை இந்தியாவிற்கு திரும்ப தர வேண்டும் .தற்போது பிரிட்டன் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு கருத்துகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருவது வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement