டாக்டர் பட்டம் பெற்ற ஹிப்ஹாப் ஆதி | ஓணம் கொண்டாட்டம் – News In Photos August 24, 2023 by விகடன் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் தாமதமாக வந்ததால், வெளியே காத்திருந்த அமைச்சர் பொன்முடி மற்றும் மாணவர்கள். அமைச்சர்கள் மீதான உயர் நீதிமன்ற நீதிபதியின் முன்னெடுப்பு தொடர்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு. இடம்: சென்னை தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சேலத்தில் ஆர்ப்பாட்டம். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் விதிகளை மீறி செயல்படும் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகர் செல்வத்திடம் மனு அளித்தனர். சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருவிழா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பர்ய ரகங்களின் சாகுபடி- விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பர்ய உணவு வகைகள் குறித்த வேளாண்மை கண்காட்சியினை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்துவைத்துப் பார்வையிட்டார். மதுரையில் தி.மு.க சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இசை துறையில் மேற்படிப்பு மேற்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவியிடமிருந்து பட்ட சான்றிதழ் வாங்கிய இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. விருதுநகருக்கு அழைத்துவரப்பட்ட இந்தியாவின் நாட்டு இன காங்கிரேஜ் மாடுகள். விருதுநகரில் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை பெய்யததால், நீரின்றி வறண்டு வரும் விவசாய பாசன குளங்கள். சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்திலுள்ள தனியார் பள்ளியில், அத்தப்பூ கோலப் போட்டி நடந்தது. வேலூர்: தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம். சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவப் பகுதியில் தர இறங்கியதன் வெற்றியைக் கொண்டாடும்விதமாக, தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள் தேசியக்கொடியை கைகளில் ஏந்தியும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். Source link