அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஊழியர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
மூன்றாம் நாளாக அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி
திமுக என்றாலே அரசு ஊழியர்கள் மீது தனி கவனம் என்ற பேச்சை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் ஓர் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்பதற்கான கல்வி முன்பணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உயர்கல்விக்கு முன்பணம்
முன்னதாக 13.06.1979ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி உயர்கல்விக்கான முன்பணம் 1,000 ரூபாய் எனவும், பல்தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கு 500 ரூபாய் எனவும் முன்பணம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாகவும், 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாகவும் 01.12.1988-ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 23.03.1993ல் மீண்டும் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டது.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில்முந்தைய வரம்புஉயர்த்தப்பட்ட வரம்புதொழில் முறை கல்விரூ.1,500/-ரூ.2,500/-கலை மற்றும் அறிவியல் கல்லூரிரூ.1,500/-ரூ.2,000/-பல்தொழில்நுட்ப கல்லூரிரூ.750/-ரூ.1,000/-
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.
தமிழக அரசு அறிவிப்பு
இந்த அரசாணை வெளியிடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்து விட்டன. எனவே அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெற வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணம் தமிழக அரசால் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை ஆனது நடப்பு 2023 – 2024ஆம் கல்வியாண்டில் இருந்து வழங்கப்படும். அதேசமயம் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இரண்டு நிபந்தனைகள்
தொகுதி ’சி’ மற்றும் ’டி’ ஊழியர்களுக்கு ஒரு மாத அடிப்படை சம்பளத்திற்கு சமமான தொகை அல்லது அதற்கு கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அந்த தொகை அனுமதிக்கப்படும்.தொகுதி ’ஏ’ மற்றும் ’பி’ அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அந்த தொகை அனுமதிக்கப்படும்.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில்முந்தைய வரம்புதற்போது உயர்த்தப்பட்ட வரம்புதொழில் முறை கல்விரூ.2,500/-ரூ.50,000/-கலை மற்றும் அறிவியல் கல்லூரிரூ.2,000/-ரூ.25,000/-பல்தொழில்நுட்ப கல்லூரிரூ.1,000/-ரூ.25,000/-
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என்று தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.