வாஷிங்டன்: தேர்தல் முறைகேடு வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு எதிரான வழக்கில் இன்று கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 2017-ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்டு டிரம்ப், 78 வெற்றி பெற்று அதிபரானார்.
இவர் மீது அரசு ஆவணங்களை மறைத்து வைத்தது, பாலியல் புகார் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜார்ஜியா மாகாணத்தில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. . வழக்கு விசாரணை அங்குள்ள ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் இன்று நேரில் மாகாண கோர்ட் ஆஜராகின்றனர். டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement