நாட்டில் இயங்கும் 90% வாகனங்களின் புகை வெளியீடு தரக்குறைவானது

நாட்டுக்குள் பஸ்களை கொண்டுவருவது தொடர்பில் குறைந்தபட்ச தரநிலையை தீர்மானிக்கும் பிரமாணங்களுக்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பவைக் குழுவில் அனுமதி

இந்நாட்டில் இயங்கும் 90% வாகனங்களின் புகை வெளியீடு தரக்குறைவானது என பாராளுமன்ற வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியதுடன், துறைசார் மேற்பவைக் குழுக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளும் குழுவில் கலந்துகொண்டனர்.

இந்நாட்டில் பயணிகள் போக்குவரத்து பஸ்களை கொண்டுவருவது தொடர்பில் குறைந்தபட்ச தரநிலையை தயாரிப்பது சம்பந்தமான முன்மொழிவு போக்குவரத்து அமைச்சினால் குழுவில் முன்வைக்கப்பட்டதுடன், அது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்நாட்டுக்குள் பயணிகள் போக்குவரத்து பஸ்களை இறக்குமதி செய்யும் போது இருக்கவேண்டிய குறைந்தபட்ச தரநிலையை தயாரிப்பதற்கு இந்தக் குழுக் கூட்டம் இடம்பெற்றதுடன், இதற்கு 18 நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தன. அது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதன் பின்னர், எதிர்காலத்தில் இந்நாட்டுக்கு பயணிகள் போக்குவரத்து பஸ்களை இறக்குமதி செய்யும் போது குழு தீர்மானித்த பிரமாணங்களுக்கு அமைய இறக்குமதி செய்யப்பட வேண்டும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையில் இயங்கும் 90% வாகனங்களின் புகை வெளியீடு தரக்குறைவானது எனவும் வருடாந்த வெளியீட்டுக்கு முன்வைக்கப்படும் வாகனங்களின் 20% புகை வெளியீடு தகைமையற்றது என குழுவில் புலப்பட்டது. இலங்கையில் இயங்கும் 90% வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுவதாகவும் தெரியவந்தது.

குழுவில் கலந்துகொண்ட நிறுவனங்கள் சம்பந்தட்ட விடயங்களை முன்வைத்ததுடன், பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இறக்குமதி மற்றும் வாகனங்களின் புகை வெளியீடு தொடர்பான கண்காணிப்பு, பரிசீலனை மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கையொன்றை இரண்டு மாதங்களுக்குள் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.