FIDE நடத்தும் செஸ் உலகக்கோப்பை அஜர்பைஜானின் பகுவில் நடந்து வந்தது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும் கார்ல்சனும் மோதியிருந்தனர். மூன்று நாட்கள் நடந்த போட்டியின் முடிவில் கார்ல்சன் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி வென்றிருக்கிறார்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/20230824_170807.jpg)
இந்த உலகக்கோப்பைத் தொடரில் கிளாசிக்கல் முறையில் முதல் இரண்டு நாட்கள் நடந்த சுற்றுகள் இரண்டும் டிராவில் முடிந்திருந்தது. இந்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று இன்று நடந்தது. ரேபிட் முறையில் இரண்டு சுற்றுப் போட்டிகள். அதில், முதல் சுற்று போட்டியில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி கார்ல்சன் வென்றார். தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய பிரக்ஞானந்தா பின்னர் கொஞ்சம் நேர அழுத்தத்தால் தடுமாறினார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/20230824_080829.jpg)
47 வது மூவின் போது பிரக்ஞானந்தாவுக்கு சில நொடிகள் மட்டுமே மிஞ்சியிருந்தது. அந்த சமயத்தில் வேறொன்றும் செய்ய இயலாத நிலையில் பிரக்ஞானந்தா தோல்வியை ஒப்புக்கொண்டு முதல் சுற்றிலிருந்து வெளியேறினார்.
போட்டியில் நீடிக்க பிரக்ஞானந்தா இரண்டாவது சுற்றை வென்றே ஆக வேண்டும் என்ற சூழல் நிலவியது. கார்ல்சன் இந்த சுற்றை டிரா செய்தாலே உலகக்கோப்பை அவருக்குதான் எனும் சூழல் இருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692879369_305_20230824_080902.jpg)
இந்நிலையில், முதல் சுற்று தோல்விக்குப் பிறகு ஏற்பட்ட அழுத்தத்தில் தொடக்கத்திலிருந்தே பிரக்ஞானந்தா தடுமாறினார். சில நிமிடங்கள் ஆட்டம் நீடித்த நிலையில் சுற்றை டிரா செய்து கொள்வதாக இருவரும் அறிவித்தனர். இதனால் 2.5 புள்ளிகள் பெற்ற கார்ல்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.