இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? இந்த பதிலுக்காக 2024 மக்களவை தேர்தலுக்காக காத்திருக்க வேண்டும். மே மாதம் வருகிறது என்று எடுத்துக் கொண்டால் சரியாக 9 மாதங்கள் இருக்கின்றன. இதற்கிடையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) 38 கட்சிகளும், இந்தியா (INDIA) கூட்டணியில் 26 கட்சிகளும் கைகோர்த்து தேர்தலுக்கு அச்சாரம் போட்டுள்ளன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது.
இந்தியா கூட்டணி ஆலோசனைஆனால் இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இம்மாத இறுதியில் மும்பையில் நடக்கும் 3வது ஆலோசனை கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளன. இப்படி தேசிய அரசியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி அனலை கூட்டி வருகின்றன. சமீபத்தில் தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருந்தது.தந்தி டிவி கருத்துக்கணிப்புஅதாவது, மே மாதம் தொடங்கி ஒவ்வொரு கட்டமாக நடத்தியது. அதற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பின் சில பின்னணி விஷயங்களை பார்த்து விடலாம். தமிழகம் (39) மற்றும் புதுச்சேரியில் (1) என மொத்தம் 40 மக்களவை தொகுதிகளை சேர்ந்த 2,500 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதாவது, தமிழர்களிடம் நடத்தப்பட்டது எனக் கூறலாம். மே, ஜூன் ஜூலை என மூன்று மாதங்களாக அடுத்தடுத்து மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
மோடி vs ராகுல்இதில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி, யார் அடுத்த பிரதமராக வர வேண்டும்? என்பது தான். கடைசியாக ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று 71 சதவீதமும், நரேந்திர மோடி வர வேண்டும் என்று 29 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதங்களையும் எடுத்து கொண்டால் ராகுல் காந்திக்கு ஆதரவாக மே – 71 சதவீதம், ஜூன் – 70 சதவீதம், ஜூலை – 71 சதவீதம் என கருத்து தெரிவித்தனர்.
இந்தியா கூட்டணிக்கு ஆதரவுமோடிக்கு ஆதரவாக மே – 27 சதவீதம், ஜூன் – 29 சதவீதம், ஜூலை 29 சதவீதம் என கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ராகுல் காந்திக்கு, அதாவது காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணிக்கு தமிழர்கள் ஆதரவாக நிற்பதாக பார்க்கப்படுகிறது. இன்னும் சரியாக சொல்லப் போனால் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு தான் வருகின்ற மக்களவை தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்கக் கூடும் என்ற பிம்பம் ஏற்பட்டுள்ளது.
பாஜக எதிர்ப்பு மனநிலைஇதேபோல் தேர்தல் வரும் வரை அடுத்தடுத்த மாதங்களில் கருத்துக்கணிப்புகள் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்கையில், இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பின்னர் ராகுல் காந்திக்கு ஆதரவான மனநிலை தமிழர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பாஜக எதிர்ப்பு மனநிலை தான் இங்கு காணப்படுகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கின்றனர்.
அண்ணாமலை அசைன்மென்ட்மேலும் சிலர் கூறுகையில், 30 சதவீத ஆதரவு பாஜகவிற்கு கிடைத்தது பெரிய விஷயம் தான். கடந்த கால தேர்தல்களை ஒப்பிடுகையில், கருத்துக்கணிப்புகளை ஒப்பிட்டு பார்க்கையில் அக்கட்சியின் எழுச்சியாக தான் இருக்கிறது. இதற்கு அண்ணாமலை தீவிரமான திமுக எதிர்ப்பு அசைன்மென்ட்கள் முக்கிய காரணம் என்ற பார்வையை முன்வைக்கின்றனர்.