சென்னை வீடு வீடாக சென்று மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களைச் சரி பார்க்கும் பணி தன்னார்வலர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கவுள்ளது. இதற்காக குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை இந்த முகாம்கள் மூலமாக சுமார் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692909676_women.jpg)