Allu Arjun: சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன், விருதுகளை அள்ளிய ஆர்.ஆர்.ஆர்.: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்

69வது தேசிய விருதுகள் ஆகஸ்ட் 24ம் தேதி மாலை அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் படி தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம்
புஷ்பா தி ரைஸ் படத்தில் சிறப்பாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக ஆலியா பட்டுக்கும், மிமி படத்திற்காக க்ரிட்டி சனோனுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

புஷ்பா படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தேவிஸ்ரீ பிரசாத்துக்கும், சிறந்த பி.ஜி.எம்முக்காக கீரவாணிக்கும்(ஆர்ஆர்ஆர்) விருது கிடைத்திருக்கிறது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மிமி படத்தில் நடித்ததற்காக பங்கஜ் திரிபாதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் சிறப்பாக நடித்த பல்லவி ஜோஷிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்திருக்கிறது.

சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரவின் நிழல் படத்திற்காக சிறந்த பாடகிக்கான விருது ஸ்ரேயா கோஷலுக்கு கிடைத்திருக்கிறது.

கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த நல்லாண்டி சிறப்பு மென்ஷன் பெற்றார். சிறந்த எஜுகேஷனல் படமாக சிற்பங்களின் சிற்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜெய்பீம் படத்திற்காக சூர்யா, கர்ணனுக்காக தனுஷ், சார்பட்டா பரம்பரைக்காக ஆர்யா ஆகியோரில் யாராவது ஒருவருக்கு தான் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என தமிழ் ரசிகர்கள் நம்பினார்கள். மேலும் அனிருத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

இந்நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி விருது கிடைக்காமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.