Hero Glamour 125 – 2023 ஹீரோ கிளாமர் 125 பைக் விற்பனைக்கு வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய கிளாமர் 125 பைக்கில் சில ஸ்டைலிங் அம்சங்களை முந்தைய பழைய மாடலில் இருந்து புதுப்பித்து ரூ. விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும் கிளாமர் 125 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 63 கிமீ ஆக உள்ளது.

ஹீரோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய மேம்பாடுகளை பெற்ற டெஸ்டினி பிரைம், பிளெஷர் பிளஸ், உள்ளிட்ட மாடல்களுடன் பேஷன் பிளஸ் என பலவற்றை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றது.

2023 Hero Glamour 125

125சிசி சந்தையில் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கினை அடுத்த கிளாமர் 125 பைக் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், OBD 2 அம்சத்தை பெற்ற அதே 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 10.7 bhp பவர் மற்றும் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், USB சார்ஜிங் போர்ட் மற்றும் ஹீரோவின் i3S ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் ஆகியவை மேம்படுத்தப்பட்ட எரிபொருள் செயல்திறனுக்காக வழங்கப்பட்டுள்ளது.

புதிய கிளாமர் 125 பைக்கில் உள்ள கன்சோல் நிகழ்நேர மைலேஜ், குறைந்த எரிபொருள் அறிகுறி போன்ற தகவல்களைக் காட்டுகிறது. ஹீரோ ரைடர் இருக்கையின் உயரத்தை 8 மிமீ குறைத்துள்ளது. அதே சமயம் பில்லியன் இருக்கை உயரம் 17 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெந்தொலைவு பயணத்திற்கு ஏற்ற அம்சத்தை பெறுகின்றது.

2023 hero glamour bike

டயமண்ட் பிரேம் சேஸ் பெற்றுள்ள இந்த பைக்கில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் இரட்டை பின்புற ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர் உடன் பிரேக்கிங் அமைப்பில், சிபிஎஸ் (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) உடன் பின்பக்க டிரம் யூனிட்டுடன் முன்புறத்தில்வ டிஸ்க் பிரேக் அல்லது டிரம் பிரேக் என இரு வித வேறுபாட்டை பெறுகிறது.

18 அங்குல அலாய்கள் 80/100 முன் மற்றும் 100/80 பின்புற டயர்களில் கொண்டுள்ளது.

  • GLAMOUR DRUM BRAKE ₹ 83,508
  • GLAMOUR DISC BRAKE ₹ 87,508
  • GLAMOUR CANVAS DRUM BRAKE ₹ 83,508
  • GLAMOUR CANVAS DISC BRAKE ₹ 87,508

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

2023 ஹீரோ கிளாமர் 125 படங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.