இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் வழக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 69- வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஆர்.மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்’ சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதை தமிழில் ‘கடைசி விவசாயி’ படம் வென்றிருக்கிறது.
சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்துக்காக அல்லு அர்ஜூனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக ஆலியா பட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோல்டன் குளோப், ஆஸ்கர் போன்ற பல விருதுகளை வென்ற ‘RRR’ திரைப்படம் இம்முறையும், சிறந்த சண்டைப்பயிற்சி, சிறந்த நடன இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த பின்னணி இசை, சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என ஆறு விருதுகளைக் குவித்திருக்கிறது. தேசிய விருதுகளை வென்றவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.