வாஷிங்டன்: தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
2020 ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜார்ஜிய மாகாண தேர்தல் முடிவுகளை சட்டவிரோதமாக மாற்றியமைக்க திட்டமிட்டதாக டிரம்ப் உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவானது. 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. இதனால், 19 பேரையும் கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. சரணடைய போவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இந்த வழக்கில், ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா சிறையில் நேற்று இரவு 7 மணியளவில்( அமெரிக்க நேரப்படி) டிரம்ப் சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர்.
இதனால், 20 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் 2 லட்சம் அமெரிக்க டாலர் ஜாமினின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து டிரம்ப் கூறுகையில், இங்கு நீதியை கேலிக்கூத்து ஆக்கி உள்ளனர். நான் எந்தவொரு தவறும் செய்யவில்லை. அடுத்தாண்டு நடக்கும் தேர்தலிலும் முறைகேடு செய்யவே இப்படிச் செய்கிறார்கள். என்ன நடந்தாலும் நான் வெற்றி பெறுவது உறுதி எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement