![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692935175_NTLRG_20230824155334402405.jpg)
மல்டி ஸ்டாரர் படமாக உருவாகும் விஜய் 68
நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இப்போது முன் தயாரிப்பு பணிகள் மற்றும் நடிகர், நடிகைகள், டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவா, மாதவன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜோதிகா, பிரியங்கா மோகன் என இரு கதாநாயகிகள் நடிப்பதாக கூறப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வெளியாகவில்லை. மேலும் இந்த படம் அரசியல் தொடர்பான கதையாகவும் இருக்கலாம் என்கிறார்கள். ஆகவே மல்டி ஸ்டார் படமாக இதை எடுக்க மேற்சொன்ன நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.