![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692940513_NTLRG_20230824153704112667.jpg)
ரஜினி 170வது படத்தில் நடிப்பது இத்தனை நாள் தானா?
த.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் . இதில் அமிதாப்பச்சன், சர்வானந்த், பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க 35 நாட்கள் மட்டுமே அவர் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.