எமிரேட்ஸ் டிராவில் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!

மும்பையை சேர்ந்தவர் நசீம். 54 வயதான நசீம் கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஆரம்பத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றினார் நசீம். சமீபத்தில்தான் நசீம்முக்கு சூப்பர் வைஸராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

நசீம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷேர் மார்க்கெட்டில் தான் சம்பாதித்த மொத்தத்தையும் இழந்தார். தொடர்ந்து இரண்டு நாட்களில் ஷேர் மார்க்கெட்டில் மொத்தத்தையும் இழந்தார் நசீம். அந்த இழப்பு அவரது குடும்பத்திற்கு பேரடியாக இருந்தது.

ஓணம் ஸ்பெஷல்… நெல்லை வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்… அசத்தும் தெற்கு ரயில்வே!

அதில் இருந்து நசீம்மாலும் அவரது குடும்பத்தினராலும் மீண்டுவர முடியவில்லை. இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைக்காக சென்ற நசீம், கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

மும்பையில் வீட்டுக்கடனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கிய நசீம் அதற்கான கடன் தொகையை மாதா மாதம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் எமிரேட்ஸ் டிரா FAST5 விளையாட்டில் பங்கேற்றார் நசீம். இதில் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த நசீம் 50,000 திர்ஹம்களை பரிசாக வென்றார்.

கள்ளக்காதல்… இரண்டு பெண்களுடன் லாட்ஜ்க்கு சென்ற 25 வயது இளைஞர் திடீர் மரணம்… துடிக்கும் பெற்றோர்!

இந்திய ரூபாய் மதிப்பில் 11,23,704 ரூபாய் ஆகும். இந்த பரிசு தொகையை தான் வென்றிருப்பது தனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டுள்ள நசீம், இந்த பணத்தின் மூலம் தனது வீட்டுக்கடனை அடைத்து விடுவேன் என தெரிவித்துள்ளார். இந்த பரிசு தனது தோள்களில் இருந்த பெரிய சுமையை இறக்கி வைக்க உதவியாக உள்ளது என்றும், தனது வயதான தாயுடன் சேர்ந்து வசிக்க தன்னை முன்கூட்டியே ஓய்வு பெற செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் UAE குடிமகனான தொழில் அதிபர் மஜித் சுல்தான் இப்ராஹிம், 25,000 திர்ஹம்களை வென்றுள்ளார். இந்திய மதிப்பில் 561,852 ரூபாய் ஆகும்.

திருப்பதியில் மிகப்பெரிய மாற்றம்: தேவஸ்தானத்தின் முழு கன்ட்ரோலும் இனிமே இவங்கக்கிட்டதான் – ஜெகன் போட்ட ஆர்டர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.