தானே:மஹாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை, கார்கர் பகுதியில் சந்தேகத்தின் பேரில் இருவரிடம் போலீசார் விசாரித்தனர். குஜராத்தைச் சேர்ந்த துஷாப் சாஹா, 40, அப்துல் ஹாசன் துர்க், 41, என்பது தெரிந்தது.
அவர்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
அவற்றின் சந்தை மதிப்பு, 49,90,500 ரூபாய் எனவும், இதுதவிர அவர்கள் கையிருப்பில் வைத்திருந்த 1,09,500 ரூபாயையும் போலீசார் கைப்பற்றினர்.
இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement