பி.வாசு இயக்கத்தில் லாகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள `சந்திரமுகி -2′ திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இதையொட்டி இதன் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஆஸ்கர் புகழ் கீரவாணி இதற்கு இசையமைத்துள்ளார்.
இதில் பேசிய நடிகர் வடிவேலு, “‘மாமன்னன்’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைவிட வெற்றிப்படமாக ‘சந்திரமுகி 2’ இருக்கும். ‘மாமன்னன்’ல பார்த்த வடிவேலு வேற, ‘சந்திரமுகி 2’ வடிவேலு வேற. கொஞ்ச நாள் திரை உலகில் வரவிடாம பண்ணிட்டாங்க. கதவைப் பூட்டி சாவி கொண்டு போயிட்டாங்க. புது கதவு பண்ணி என்னை வெளியில் கொண்டுவந்த எங்க அண்ணன் சுபாஸ்கரன். நான் கும்புடுற கருப்பசாமிக்கு இணையா அவரையும் நான் கும்புடுறேன். வாசு அண்ணன் மிகப் பெரிய இயக்குநர்.
அவருக்கு வயசு 70 ஆகுது ஆனால் பார்க்க 35 வயசு மாறி இருப்பார். அவர் யாருகிட்டயும் கதை சொல்ல மாட்டார். என்னிடம் இந்த வாட்டி 3 மணி நேரம் கதை சொன்னார். கதையைக் கேட்டு ஆடிப் போய்ட்டேன். இந்தப் படத்துலயும் அதே முருகேசனாக வரேன். லாரன்ஸ், கங்கனா மற்ற படக்குழுவினர் உழைப்பு ரொம்ப பெருசு. அதைத் திரையில் பார்ப்பீங்க. எனக்கும் லாரன்ஸ் மஸ்டருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு! அக்கப்போர் பண்ணிருக்கோம். அடுத்து வெற்றி விழாவில் சந்திப்போம்” என்று பேசியுள்ளார்.