டில்லியில் 3 நாள் போக்குவரத்து மாற்றம் மெட்ரோ ரயிலில் பயணிக்க அறிவுறுத்தல்| 3 Day Transport Change in Delhi Instruction to Travel by Metro Train

புதுடில்லி:’தலைநகர் டில்லியில் ஜி – 20 மாநாட்டை முன்னிட்டு, செப்டம்பர் 8 முதல் 10 வரை விமான நிலையத்தில் இருந்து மாநகருக்குள் செல்லும் சாலைகளில், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்’ என, டில்லி மாநகரப் போலீஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுடில்லியில் செப். 8 – 10 வரை ஜி 20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்போர் விமான நிலையத்தில் இருந்து மாநகருக்குள் செல்வதும், வருவதுமாக இருப்பர் என்பதால், மூன்று நாட்களும் டில்லி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படலாம்.

ஆனால், தேசிய தலைநகர் பகுதிகளிலிருந்து சொந்த வாகனங்களில் விமான நிலையத்துக்கு செல்வோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு செல்லும் பயணியர் மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் தாமதமின்றி விமான நிலையத்தை அடையலாம்.

குருகிராம் நகரில் இருந்து புதுடில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு சாலை வழியாக வருவோர், தேசிய நெடுஞ்சாலை –48, – ராவ் கஜராஜ் சிங் மார்க், பழைய டில்லி -குருகிராம் சாலை, சர்வீஸ் சாலை வழியாக விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தை அடையலாம்.

அதேபோல, ஒன்றாவது முனையத்துக்குச் செல்லும் விமான பயணியர் தேசிய நெடுஞ்சாலை – -48, – ராவ் கஜ்ராஜ் சிங் மார்க், – பழைய டில்லி – குருகிராம் சாலை, மூன்றாவது முனைய- சர்வீஸ் சாலை, சஞ்சய் டி -பாயின்ட், – உல்லான் படார் மார்க் வழியாக செல்லலாம்.

துவாரகாவிலிருந்து வருவோர், துவாரகா செக்டார் -22 சாலை, மூன்றாவது முனைய சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தலாம்.

புதுடில்லி மற்றும் தெற்கு டில்லியில் இருந்து விமான நிலையம் வரும் பயணியர் எய்ம்ஸ் சவுக்- ரிங் ரோடு, – மோதி பாக் சவுக், ஆர்.டி.ஆர்., மார்க்,- சஞ்சய் டி- பாயின்ட் – சர்வீஸ் ரோடு, தேசிய நெடுஞ்சாலை – 48 வழியாக மூன்றாவது முனையத்தையும், உல்லான் படார் மார்க் ஒன்றாவது முனையத்தையும் அடையலாம்.

மேற்கு டில்லியில் இருந்து வருவோர் பஞ்சாபி பாக் சவுக், – ரிங் ரோடு, ராஜா கார்டன் சவுக், நஜாப்கர் சாலை,- பங்கா சாலை, தப்ரி – துவாரகா சாலை, தப்ரி — குருகிராம் சாலை, துவாரகா சாலை வழியாக செல்லலாம். வடக்கு மற்றும் கிழக்கு டில்லியில் இருந்து வருவோர் ஐ.எஸ்.பி.டி., காஷ்மீர் கேட், – ஜான்சி ராணி மேம்பாலம், ரோஹ்தக் சாலை, பஞ்சாபி பாக் சவுக், -ரிங் ரோடு, ராஜா கார்டன் சவுக், நஜாப்கர் சாலை, பங்கா சாலை – தப்ரி – துவாரகா சாலை, -தப்ரி – -குருகிராம் சாலை வழியாக விமான நிலையத்தை அடையலாம்.

போக்குவரத்து மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை அதிகபட்சமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பஸ்சுக்கு கட்டுப்பாடு

டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு சிறப்பு கமிஷனர் எஸ்.எஸ்.யாதவ் கூறியதாவது:ஜி 20 மாநாட்டை முன்னிட்டு செப். 8ம் தேதி நள்ளிரவு முதல் 10ம் தேதி நள்ளிரவு வரை மாநகரின் பல பகுதிகளில் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.அதேநேரத்தில், ஆம்புலன்ஸ் உட்பட அத்தியாவசிய வாகங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார். துணை கமிஷனர் ஆலாப் படேல் கூறுகையில், “லுடியன்ஸ் டில்லியில் வசிக்கும் மக்கள் அல்லது ஹோட்டல்களில் முன்பதிவு செய்துள்ள சுற்றுலாப் பயணியர் ஆட்டோ, டாக்ஸிகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.டில்லி விமான நிலையத்திலிருந்து லுடியன்ஸ் டில்லிக்கு வருவோரின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.மாநிலங்களுக்கு இடையேயான பஸ்கள் டில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும். ஆனால், பஸ் நிலையங்களில் அவற்றை நிறுத்த அனுமதிக்கப்படாது. ஆம்புலன்ஸ் உதவி சேவைக்கு, 6828400604 என்ற எண்ணை அழைக்கலாம். செப்டம்பர் 7ம் தேதி இரவு முதல் இந்த சேவை துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.